கவிதை பேசுகிறது

என்னுடைய வரிகளும்.. நான் ரசித்த வரிகளும்...

Tuesday, October 18, 2005

என் பார்வையில் ஒரு ஆண்

என் நண்பர்களுகெல்லாம் ஒரு ஆதங்கம் ..
நான் எப்பொழுதும் ஒரு பெண்ணாய் என் எண்ணங்களை என் கவிதைகளில் எழுதுவதில்லை என்று..

ஒரு பெண்ணாய் எனது சிந்தனைகள் இன்று..

என் பார்வையில் ஒரு ஆண்


எனக்குப் பிடித்த......

கம்பீரமான குரல்..
கற்பனை இல்லாத வார்தைகள்..

சீரான செயல் வேகம்..
ஆராய்ந்து அறியும் அறிவு

நிதானத்துடன் கூடிய சிந்தனை..
எண்ணங்களை செயல்படுதத் தெரிந்த முயற்சி..

சொல்வதை தெளிவாய் சொல்லும் பண்பு.
எதற்கும் அஞ்ஜாத திடம்..

ஒரு திமிர் கலந்த பார்வை..
எதுவும் முடியும் என்னால் என்று எல்லோருக்கும் பறை சாற்றுவதாய்..

மொத்தத்தில் திடமான சிந்தனை..
தெளிவான செயல்.
சீரான வேகம்..
எல்லரையும் மதிக்கத்தெரிந்த பண்பு.

மீண்டும் சந்திப்போம்..

Monday, October 17, 2005

அழியாத நினைவுகளாய்..

தொடர நினைத்த வரிகள்..தொடர்ந்து வந்த வேலையால் தொடர முடியாமல் போய்விட்டது.

சில வினாடிகள் பலப்பல எண்ணங்களின் பரிமாற்றங்கள்..என்னுள்ளே..
எண்ணக்குவியலின் மோதலில் சிக்குண்ட என்னை
அவள் கடந்து போகையில் ..அவள் இதழோரதில் ஒரு குறும் சிரிப்பு...
வேகமாய் கடந்து சென்ற அவளின் சேலை முந்தானை என்னை வருடிச் சென்றது..
கொஞ்சம் நளினமாய்.. மின்னலாய்
திரும்பிப்பார்த்து மன்னிப்பு கேட்டது அவளின் பண்பாடு.

தென்றலாய் வருடிச் சென்ற அந்த முகம்...
தெளிவாய் என் மனதிற்குள்..

தொடந்து வந்த என் வேலைகளினால் மறந்து போனது..
சில நாள் கழித்து கனவில் அவள் முகம்..

தெளிவாய்..இனிமையாய் ..

கடந்து சென்றது சில நொடிகளில்தான் என் கண்ணில் பட்டாள்
கலையாத கனவாய் அவள் என் மனதில் நின்றாள்.

இது போல பல முகங்கள்...ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்..
அழியாத நினைவுகளாய்..