வாழ்க்கை சில நேரங்களில்
நிறைய நாட்கள் ஆகிவிட்டது.. நான் இங்கு வந்து...
சில நல்ல விசயங்கள் இந்த தொடர்பில்லாத நாட்களில்..
சில வெட்டி வேலைகள்..எப்பொழுதும் போல்..
வாழ்க்கை சில நேரங்களில் ...
ஒரு சின்ன ஆராய்ச்சி!...
வாழ்க்கை என்ன கொடுக்கப் போகிறது இன்று என்று..
காலையில் எழுந்தவுடன் என்ன வேலை இன்று என்று..
திட்டமிடுதல் என்னுடைய இயல்பு..
திட்டமிட்ட படிதான் நடக்கிறேனா என்று கேள்வி கேட்காதீர்கள்..
சில நாட்கள் அப்படியே நடக்கும்.. பல நாட்கள்... ((&##*@))
எண்ணமிடுதல் மனித இயல்பு..
எட்டிப்பிடித்தல்...மானிட ஆசை..
எட்றமிகு எண்ண வெளிப்பாடு.. அதை..
ஏறுமுகப்படுத்தும் செயல்பாடு..முனைப்பு..
முடிக்கும் ஆற்றல்.. எல்லாம் நம் கையில்தான்..
சிக்கல்கள் வந்தாளும்..
சிந்தனை இடறினாளும்
அதற்கு நாமே பொறுப்பாய்..
தடை படும் என் சிந்தனையை..மீண்டும் தொடர்கிறேன்..
