கனவுகள் இலவசம்!!
இங்கே கனவுகள் இலவசம்
கற்பனைகளும் இலவசம்..
அதை பொதித்து வைக்க
இந்த இணையதளமும் இலவசம்..
பொருள் ஒன்று வாங்கினால்
இன்னொன்று இலவசம்..
புடவை ஒன்று வாங்கினால்
இன்னொன்று இலவசம்...
நகை ஒன்று வாங்கினால்
நன்கொடை இலவசம்...
எல்லாவற்றுக்கும் ஒன்றுக்கு
தொகை அளிக்கிறோம் - நாம்தான்...
என்றாலும் எல்லாமே இலவசமாய்
என் கனவுகள் மட்டும்தான்.
இங்கே கனவுகள் இலவசம்..
கற்பனைகளும் இலவசம்..
அதில் வரும் கதாப்பாத்திரமும் இலவசம்..
கனவில் ஒரு கவிதை..
ஆரஞ்சு வண்ணத்தில்..
பச்சை பூப்போட்ட பட்டுப்புடவையில்..
அவளின் நீளக்கூந்தல் விசிறியாய் அசைந்தாட..
பெண்மையின் இலக்கணமாய்
எட்டெடுத்துநடந்து வந்தாள்..
தென்றலாய் நறுமணத்துடன்
காற்றினில் மிதந்து வந்தாள்..
அவள் நளினம் அவள் அழகு..
என்னுள் ஏதேதோ கற்பனைகள்...
விழி உயர்த்தி என்னைப் பார்த்த பார்வையில்..
என்னுள் ரசாயண மாற்றங்கள்..
கற்பனைக்குதிரை..தறி கெட்டுப்பறந்தது..
என்னுள்ளும்தான்...
மீதியை நாளை தொடருகிறேன்..
