கவிதை பேசுகிறது

என்னுடைய வரிகளும்.. நான் ரசித்த வரிகளும்...

Saturday, June 17, 2006

வரிகளின் விளக்கம்..

மொட்டு மலர்ந்ததது 'பூவாக'
காய் கனிந்தது பழமாக.

சூரியன் உதித்தது பகலாக
சந்திரன் தோன்றியது நிலவாக!..

பூ மலர்ந்ததது மணமாக
புன்னகை பிறந்தது இதமாக!.

மாலை மங்கியது இரவாக
மதியும் மயங்கியது கனவாக

அன்பு தொடங்கியது நட்பாக!
அன்னையின் அணைப்பு ஆதரவாக!..

வார்த்தை பிறந்தது வரியாக!
வரியும் வரைந்தது உரையாக!..

உரை பயின்றது நடையாக!.
நடை தொடகியது கவிதையாக!

தோன்றிய கவிதைகளின்
தொகுப்புரை இங்கே!..

துளிகளாய் சிதறவிடிருக்கிறேன்!!..
என் சிந்ததையை..

எழுத்துக்களாய் வடித்திருக்கிறேன்..
என் எண்ணங்களை..

கற்பனைகளை செதுக்கி இருக்கிறேன்..
என் வாழ்வின் நிஜங்களை..
அனுபவங்களை ஆராதித்து இருக்கிறேன்.. தமிழ் வரிகளில்..

ஆழ்கடலில் முத்தெடுத்து இருக்கிறேன்..
என் மனதின் உணர்ச்சிகளை..

வடித்திருகிறேன் வார்தைகளாக...


1 Comments:

Blogger மா.கலை அரசன் said...

வார்த்தை பிரயோகம் வன்றாக உள்ளது. நிறைய எழுதுங்கள். அப்பப்போ நம்ம பக்கத்தையும் எட்டிப்பாருங்க...

Mon Jun 26, 09:29:00 AM 2006  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home