கவிதை பேசுகிறது

என்னுடைய வரிகளும்.. நான் ரசித்த வரிகளும்...

Saturday, December 13, 2008

வர்ணித்து சில வரிகள்..


நெற்றியில் நேராய் விழுந்த உன் முன் உச்சி முடி..
style லாய் நீ அணியும் Raybon கண்ணாடி
வேகமாய் போகும் வாகனத்தில்
கடந்து செல்லும் சில கணங்கள்..
உன் பார்வையில் தப்பாமல்..
எண்ணத்தில் பதிந்து விட்ட‌
signal லில் சிக்கிய அவள் முகம்..

கவனமாய் கண்ணாடி கழற்றி
மனதில்
பதித்துக் கொள்ளத் தூண்டிய

அவள் செய்கை!!..

அவளின் உதவி பெற்ற பிஞ்சுக்
குழந்தையின் அன்புப் பறிமாறல்..
ஆச்சர்யத்தில் மலர்ந்த அவள் முகம்....

பிடிக்கும்...

எல்லாம் பிடிக்கும் எனக்கு!!
என்னைக் கடந்து
வேகமாய் போகும் உன் வாகனம்!!

தொலைவில் கேட்கும்
உன் கம்பீரமான குரல்..

பக்கத்தில் சேலை
நுனி பிடித்து சிரிக்கும்
அந்தக் குழந்த்தையின் சிரிப்பு..


எதிர்படும் போது மலரும்
பக்கத்து வீட்டு
பாட்டியின் முகம்!!..

இரவின் தனிமையில்
இனிமையாய் கேட்கும் சங்கீதம்..

தொடத்தொட ஸூடாய்
அருந்த்திட ருஷியாய்
அம்மா சமைத்த

கார சார சமையல்..


எல்லாம் பிடிக்கும் எனக்கு..

அந்த "பிடிக்கும்" என்ற

வார்த்தையையும் சேர்த்து..



நினைவுகள்..





புரட்டிப் பார்த்த மனப் புத்தகத்தில்
பொக்கிஷமாய் பல உணர்வுகள்!!

கடந்து வந்த காலச் சுவடுகளில்
அம்சமாய் பல தினங்கள்..
திருப்பிப் பார்த நினைவுகளில்
நிஜங்களாய் பல எண்ணங்கள்..
அவை கற்றுத் தந்த பாடங்கள்!!..

சேர்த்துத் தெடுத்த சந்த்தேஷ்ங்கள்..
கசப்பாய் சில உண்மைகளும் தான்..
பல வண்ணங்கள் கலந்தால் தானே
சித்திரம்!!

வாழ்வில் நினைவுகளும் சித்திரம்தான்..
தினம் தீட்டும் சித்திரங்கள்..

Friday, December 12, 2008

lines of Brian Adams...

I do not know the reason..
But i like these lines of Brian adams...

I dont care..
who you are..
where you are from...
what do you did....

as long as you love..

உன்னைப் பற்றி சில வரிகள்...

உனக்காக நான் எழுதும் கவிதை..

பல நாட்களுக்கு பிறகு
நான் எழுதும் முதல் கவிதை..

தொடர் கவிதையாய் தொடர வேண்டும்
என்ற எண்ணத்தில் தான்..

நான் உணர்ந்த உண்ர்வுகளை
வார்த்தைகள் தேடி வடிக்க
எண்ணினேன்...

போன வாரம் இதே நாள்..
நீ யாரோ?... நான் யாரோ?..
யாரும் அறியார்..

எண்ணி எட்டு நாட்களில்
எனக்கு கிடைத்த அறிய நட்பு...

உன்னுடையது..

நன்றி

அதற்கு என்று
வார்த்தைகளில் கூறி
இடைவெளி ஏற்படுத்த
மனது அனுமதிக்கவில்லை..

எண்ணிப் பார்த்தால்
வியப்பாய் இருக்கிறது..

வாழ்க்கைதான்
எத்தனை பொக்கிஷங்களை
தன்னுள்ளே கொன்டுள்ளது..

என் வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள்..

மறக்க முடியாத பல நினைவுககள்...
மதிக்க மறந்த பல நினைவுகள்..
எண்ணில் அடங்கா பல உணர்வுகள்..
எண்ணிப் பார்க்க பல நிகழ்வுகள்..

மறந்து வாழ பல நிகழ்ச்சிகள்..
பற்றுதலாய் பல உறவுகள்..

உன் நட்பென்ற உறவு
என்னுள் ஏற்படுத்திய பல உணர்வுகள்..
புதிதாய்
என்னையே எனக்கு உணர்த்துவதாய்...

ஆம்..

நல்ல உணர்வுதான்..



நான் நானாகவே இருப்பதாய் உணர்கிறேன்...
எண்ணாமல் வரும் வார்த்தை...
எண்ணத்தை பேசும் பேச்சு..
எதிர்பார்ப்பு இல்லாத நட்பு..
நன்றி
என்ற வார்த்தையை
உபயோகிக்க கூடாது
என்றாலும் முட்டிக் கொண்டு நிற்கின்றது..

நன்றி.!..

Monday, December 01, 2008



ரோஜா இதழில்
இளங்காலை பனித்துளி..
உன் கன்னத்தில் பரு..



குட்டி பையனின்
சுட்டி குறும்பு..
உன் சில்மிஷம்..

Tuesday, October 21, 2008

I am back

Finally I am back.. after 2 years...

நிறைய நாட்கள் ஆகிவிட்டது.. ஹ்ம்ம்ம்..

இந்த வாரம் என்னுடைய பழைய கல்லூரி நன்பர்களை சந்தித்தேன்..

..சில வரிகள்.. அதன் நினைவுகளாய்...



என்றோ மறந்த நினைவுகள்...கடந்து வந்த வருடங்கள்... அழித்து எழுதிய நினைவுகள் பல... ஆனாலும்...பழைய நண்பர்களை பார்க்கும்பொழுது தோன்றும் சந்தோஷம்....என்னுடைய பழைய வரிகளையே நினைவூட்டுகிறது...



என்றாவது ஒருநாள்
எப்படியாவது நாம்
சந்திப்போம்...
பேசத் தோன்றாமல்..
விக்கித்து நின்று

விழிகளால் நலம் விசாரிப்போம்..

இந்த நேசப் பிரிவில்
நான் நிச்சயம் நெகிழ்ந்திருப்பேன்.....


சத்தியமான வரிகள்...உண்மையும் ஆகி விட்டது இன்று.. ஊன்னை சந்தித்த அந்தப் பொழுது எனக்கு தோன்றிய வரிகள்தான் இவை...

Saturday, June 17, 2006

சில துளிகள்..




சில துளிகள்..

உன் மவுனங்களை
சேமித்து வை..
என் கல்லறையில்
கதறியழப் பயன்படலாம்.......

எச்சரிக்கையாய்த்தான் வருகிறேன்..

என்றாலுமென்ன

என்னையறியாமல்..

தவறி விழ நேரிடுகிறது..

ஒவ்வொரு முறையும்..

உன் கன்னத்துக்குழிக்குள்..

கை சிவக்க மருதாணி

எதற்கு?

தொட்டு வைத்துக் கொள்..

உன் வெட்கத்தை..


நீ முத்தமிட்டுச் சென்ற

அதே கன்னத்தில்

ரகசியமாய் நானும் முத்தமிட்டேன்
ஏதும் புரியாமல் சிரிக்கிறது..

பக்கத்து வீட்டுக் குழந்தை!.


கொலுசணிந்த உன்பாதங்கள்

என் வீட்டுக்கு வெளியே

நடை பயிலும்போதெல்லாம்

எட்டாவது ஷ்வரத்தை

சுவாசிக்க முடிகிறதென்னால்..

வரிகளின் விளக்கம்..

மொட்டு மலர்ந்ததது 'பூவாக'
காய் கனிந்தது பழமாக.

சூரியன் உதித்தது பகலாக
சந்திரன் தோன்றியது நிலவாக!..

பூ மலர்ந்ததது மணமாக
புன்னகை பிறந்தது இதமாக!.

மாலை மங்கியது இரவாக
மதியும் மயங்கியது கனவாக

அன்பு தொடங்கியது நட்பாக!
அன்னையின் அணைப்பு ஆதரவாக!..

வார்த்தை பிறந்தது வரியாக!
வரியும் வரைந்தது உரையாக!..

உரை பயின்றது நடையாக!.
நடை தொடகியது கவிதையாக!

தோன்றிய கவிதைகளின்
தொகுப்புரை இங்கே!..

துளிகளாய் சிதறவிடிருக்கிறேன்!!..
என் சிந்ததையை..

எழுத்துக்களாய் வடித்திருக்கிறேன்..
என் எண்ணங்களை..

கற்பனைகளை செதுக்கி இருக்கிறேன்..
என் வாழ்வின் நிஜங்களை..
அனுபவங்களை ஆராதித்து இருக்கிறேன்.. தமிழ் வரிகளில்..

ஆழ்கடலில் முத்தெடுத்து இருக்கிறேன்..
என் மனதின் உணர்ச்சிகளை..

வடித்திருகிறேன் வார்தைகளாக...


Thursday, June 08, 2006

தோழியே உனக்காகத்தான்...


தோழியே உனக்காகத்தான்...


மலரும் நினைவுகளாய் -

மனதில்.
எண்ணி மகிழ்ந்திட
நிகழ்ச்சிகள் நம் வாழ்வில் பல
என்றாலும்
மகிழ்ச்சியாய் எண்ணி மகிழ்ந்திட..
நிகழ்ச்சிகள் பல நம் வாழ்வில்.

நிஜம் கூறும் நினைவுகள் பல..
என் வாழ்வில்..
சொல்லி மகிழ்ந்திட செய்கைகள்
- செயல்கள்
பல நம் வாழ்வில்
என்றாலும் அள்ளி அணைத்திட

ஆர்பரித்த அன்பு நினைவுகள்
பலப்பல உன்னால் என் வாழ்வில்..

நினைவுகள் சுகம்தான் நித்திரையிலும்..
நாம் கன்ட கனவுகளும் சுகம்தான் .. கற்பனையிலும்..

உன் நட்பும் சுகம்தான்
என் மனதிற்கும்..

உன் செயல்களும் சுகம்தான்
எண்ணி மகிழ்வதற்கும்..

நீ கண்ட -
காணும் நினைவுகளை
நிஜங்களாக்க..

காவிய தமிழச்சியே..

உன் தோளோடு தோள் சேரக் -
காத்திறுகின்றன.. பலஇதயங்கள்..
நட்பாய்..இந்த பாரத பூமியில்

என்றாலும்

நான் யாசிப்பது என்னவோ
உன் நினைவுகளில் என்பெயர் உச்சரிக்கப்பட வேண்டும் என்பதுதான்...
உன்னால் முடியாது என்பெயரை மறப்பதென்பது
நான் அறிந்ததுதான்
ஆம்...
நீ உயிருள்ளவரை
எனை மறக்கவும் முடியாது..
இதை மறுக்கவும் முடியாது..


Friday, June 02, 2006

Superb



SS Music VJ பத்தி ஒரு Article..


Greg சொன்ன வார்தைகள்.. superb.. ரொம்ப நல்லா இருந்தது..

"மனசை திறந்து வைடா மச்சான்..எதிர்ல எதிரியே வந்தாலும் நேஷி.."

நல்ல வார்த்தைகள்..

எனக்கு ரொம்ப புடிச்சு இருந்தது..