கவிதை பேசுகிறது

என்னுடைய வரிகளும்.. நான் ரசித்த வரிகளும்...

Thursday, December 08, 2005

சற்றே நீண்ட சிறுக(வி)தை..

சற்றே நீண்ட சிறுக(வி)தை..

அலுவலகத்தில் இருந்து ஆறறை மணிக்கே கிளம்பினேன்..
இருந்தும் ஆச்ச்ர்யம் இல்லை...அன்று ஞயிற்றுக் கிழமை..

பேருந்து நிறுத்ததில் Train காக காத்திருந்தேன்..
ஐந்து ஆறு பேருந்துகள் ஒன்றாக வரும்
என்பதால் அப்படி அழைபதில் தவறொன்றும் இல்லை என்றே தோன்றியது..

சில சமயத்தில் பேருந்தும் மழையும் ஒன்றுதானே..
காத்திருக்கும் பொழுது வருவதில்லை..
வந்தாலும் நிற்பதிலை..

உரசியபடி வந்து நின்றது Share auto
மொத்த chocklate களையும்
வாயில் போட்ட குழந்தை போல வண்டி புறப்பட்டது..
உயிர் நண்பர்களுடன்கூட அவ்வளவு அருகே அமர்ந்து பயணித்ததில்லை..

கடிவாளமிட்ட குதிரை கூட காத்திருந்து சென்றது சிக்னலில்..
ஆறாம் அறிவை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டான்போலும்..

ஒரு வழியாய் சென்றடைந்தேன் வீட்டை..
கதவை திறந்தால் போர்வைகளாய் நண்பர்கள்..
சாப்பாடு இருக்காடா? என்றேன்.
சத்தம் மட்டும் கேட்டது
Hotboxசில் இருக்கென்று..
நிலவும் சூரியன் போல ஆகிவிட்டதே எங்கள் நிலமை..

Box என்றே சொல்லியிருக்கலாம் அவன்..
சுடாத தோசையும் சுட்ட "DUM" மையும்

சிணுங்கியது Cellphone..
சிந்தனையில் அவளோ என்றெண்ணி...
அருகில் சென்றேன்..

நினைத்தது என்று நடந்திருக்கிறது?..
Display-யில் "PL" calling..
"Have a meeting tommorrow morning.
Please be there in office by 9.00"

பொய்யாய் Good night உதிர்த்து.. Phoneஐ வைத்தேன்..

தூங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு சத்தமில்லாத TV!..
முழித்துக்கொண்டிருந்த எனக்கு,
குறட்டை சத்தத்துடன் TV!..

SUN TV Flash News.. அடுத்த 48 மணி நேரத்த்துக்கு..கனமழை என்று..
இவர்கள் சொன்னது என்று நடந்திருக்கிறது என்று..
மனது சொன்னது..

இருந்தும் ஆசையுற்றேன் மழை பொழிய..
Fail ஆவோம் என்று தெரிந்திருந்தும் Resultகாக காத்திருக்கும் மாணவனைபோல..

கண்களுக்கு Swipe Out பண்ணிவிட்டு
காதுகளுக்கு OT கொடுத்தேன்

FM சத்தத்தில் தூங்கினேனா
RJ அருவையில் தூங்கினேனா..தெரியவில்லை..
காலைத்தூக்கத்தை துறக்கத்துறவி கூட தயங்குவான்.
தொலைத்த தூக்கத்துடன்..கண்விழித்தேன்..

காதுகளில் கேட்டது மழை சத்தம் மட்டுமல்ல..
TVயின் சத்தமும்தான்..
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிப்புடன்..


Thodarum..

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home