கவிதை பேசுகிறது

என்னுடைய வரிகளும்.. நான் ரசித்த வரிகளும்...

Tuesday, August 30, 2005

இன்றைய பொழுது..

பூவின் மென்மை
குழந்தையின் அருகாமை
தென்றலில் நறுமணம்
அவள் கடந்து செல்லும் பொழுது..
பலாவின் கடினம்
அவனின் இயல்பு..
சந்நிதியின் அமைதி
சில பாடல் வரிகளில்..
எல்லாம் பிடிக்கும்
ரம்மியமான சூழ்நிலையில்.
பட்டாம் பூச்சிகள் பறக்கும்
பிடித்தவர்கள் கடந்து சென்றால்..
இனிய சூழலில் மலரும் நினைவுகள்..
நல்ல ஒரு சங்கீதம் கேட்டது போல..
புலரும் பொழுது இனிதாய் விடிந்தால்..
நாளே நறுமணமாய்..


இன்றைய என் பொழுது இனிமையாய்தான்
புலர்ந்து இருக்கிறது..என் நாளும் நறுமணமாய்..

நாளைய பொழுது நன்றே தொடங்கும் என்ற நம்பிக்கையுடன்..
கவி..தா

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home