கடந்து வந்த பாதை..
கொஞ்சம் திரும்பிப்பார்த்தால்
கடந்து வந்த பாதையின் கரடு முரடுகள்
கற்பனையாய் தோன்றும்...
கடக்கும்பொழுது இமயமாய் தோன்றியவை அவை.
தாயின் கருவில் கற்க ஆரம்பிக்கும் குழந்தை
சாவின் விழிம்பிழும் கற்பதை நிறுத்துவதில்லை..
நேரம்தான் எத்தனை சக்தி கொண்டது..
இமாலயமாய் தோன்றும் ஒன்றையும் இம்மி கடுகாய் மாற்றவல்லதாய்..
காலம் கடந்து எண்ணிப்பார்த்தால் கற்றுக்கொண்டது இமயமாய் மனதில்..
ஒவ்வொரு கஷ்டமும் ஒவ்வொரு அனுபவமாய்..
இதற்காகவா பயந்தோம் என்று எள்ளி நகையாடுவதாய்..
எண்ணிப்பார் .. கடந்து வந்த பாதையை..
எல்லாம் புதுப்புது அனுபவமாய்..
நாளும் கற்பதற்கு
எத்தனையோ விஷயங்களை தன்னுள் கொண்டதாய்..
எப்பொழும் கடக்கும் பாதையில் பூ தூவி வைப்பதில்லை யாரும்..
கல்லும் முல்லும் கரடும் முரடும்..அங்கங்கே பூக்களாள் நிரப்பப்பட்டு..
நாளும் ஒரு அதிசயத்தை தன்னுள் கொண்டு..
தினம் ஒரு அனுபவத்தை வழங்குவதாய்..
எண்ணிப்பார்த்தால் கடந்து வந்த பாதை இன்றும் ஒரு
புது கருத்தை தன்னுள் கொண்டதாய்..
Yes.. I was wondering yesterday after a call with my friend. The same day before 5 years even going to shopping was a big thing for me. Because we doesnt know the place, locality, quality anything. But now, things I am taking care of .. amazing..Most of the time I give one pat to myself for my gooddies..
See you next time.. Till then, take care..
Kavi.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home