கவிதை பேசுகிறது

என்னுடைய வரிகளும்.. நான் ரசித்த வரிகளும்...

Tuesday, December 13, 2005

சந்தோசங்கள்..


சின்னச் சின்ன சந்தோசஙள்..

விடிகாலை கனவு
இனிமையாய் இருந்தால்
ஒரு சின்ன சந்தோசம்..

கள்ளமில்லாத குழந்தையின் சிரிப்பை
வரும் வழியில் எதிர்கொண்டால்
சின்ன தூரல்..மனதிற்குள்..

அழகிய ஆண்மகன்..
பாதையில் கடந்து சென்றால்,
சின்னதாய் மனதிற்குள் ஒரு சாரல்..

தெரிந்த முகம்..
எதிர்கொள்ளூம் பொழுது..
சின்னதாய் ஒரு பரவசம்..

தூரத்து நண்பர்கள்..
திடீர் என்று ஒரு நாள்..
தொடர்பு கொண்டால்...

நான் வளர்த்த Roja செடியில்..
அழகிய பூவை கண்டால்..

இனிய பொழுதில் அலுவலகம் வந்து..
தொடங்கும் வேலையில்..
தடை இல்லாமல்...
தொடர்ச்சியாய் வேலை நடந்தால்..

இப்படி சின்ன சின்ன சந்தோசங்கள்..
மனதிற்குள் பட்டாம்பூச்சிகளாய்..

நாளே இனிமையாய்..
வருடும் தென்றலாய்..
தொடரும் இன்னிசையாய்..
புலரும் ஒவ்வொரு பொழுதும்..

சின்ன சின்ன சந்தோசங்களை
கொண்டதாய்அமையாதா என்ற எதிர்பார்போடு...

சின்ன சின்ன சந்தோசங்கள்தான் வாழ்க்கை..
நேற்றைய என் மனதின் சந்தோசம்தான்
இன்றையஎன் பொழுது இனிமையாய் கழிகிறது..

நன்றி என் தோழர்களுக்கு..




2 Comments:

Blogger மா.கலை அரசன் said...

நல்ல வரிகள்...

Wed Jun 21, 11:30:00 AM 2006  
Blogger மா.கலை அரசன் said...

"சந்தோசங்கள்.." சந்தோசமான கவிதை படிப்பதற்கும்.

Mon Jun 26, 09:36:00 AM 2006  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home