கவிதை பேசுகிறது

என்னுடைய வரிகளும்.. நான் ரசித்த வரிகளும்...

Thursday, June 08, 2006

தோழியே உனக்காகத்தான்...


தோழியே உனக்காகத்தான்...


மலரும் நினைவுகளாய் -

மனதில்.
எண்ணி மகிழ்ந்திட
நிகழ்ச்சிகள் நம் வாழ்வில் பல
என்றாலும்
மகிழ்ச்சியாய் எண்ணி மகிழ்ந்திட..
நிகழ்ச்சிகள் பல நம் வாழ்வில்.

நிஜம் கூறும் நினைவுகள் பல..
என் வாழ்வில்..
சொல்லி மகிழ்ந்திட செய்கைகள்
- செயல்கள்
பல நம் வாழ்வில்
என்றாலும் அள்ளி அணைத்திட

ஆர்பரித்த அன்பு நினைவுகள்
பலப்பல உன்னால் என் வாழ்வில்..

நினைவுகள் சுகம்தான் நித்திரையிலும்..
நாம் கன்ட கனவுகளும் சுகம்தான் .. கற்பனையிலும்..

உன் நட்பும் சுகம்தான்
என் மனதிற்கும்..

உன் செயல்களும் சுகம்தான்
எண்ணி மகிழ்வதற்கும்..

நீ கண்ட -
காணும் நினைவுகளை
நிஜங்களாக்க..

காவிய தமிழச்சியே..

உன் தோளோடு தோள் சேரக் -
காத்திறுகின்றன.. பலஇதயங்கள்..
நட்பாய்..இந்த பாரத பூமியில்

என்றாலும்

நான் யாசிப்பது என்னவோ
உன் நினைவுகளில் என்பெயர் உச்சரிக்கப்பட வேண்டும் என்பதுதான்...
உன்னால் முடியாது என்பெயரை மறப்பதென்பது
நான் அறிந்ததுதான்
ஆம்...
நீ உயிருள்ளவரை
எனை மறக்கவும் முடியாது..
இதை மறுக்கவும் முடியாது..


2 Comments:

Blogger இராம்/Raam said...

ரொம்ப நல்ல இருக்கு கவி உங்க கவிதை... இது சொந்தமனதா இல்ல படிச்சு ரசித்ததா

Thu Jun 08, 08:04:00 AM 2006  
Blogger Kavi---tha said...

ithu enooda thOzhikkaaka -naan ezhutiyathu........

Tue Jun 13, 11:47:00 PM 2006  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home