என்னவளே..

என்னவளே..
என் நினைவுகளில்
என்றும்
நிறைந்திருப்பவளே!
என்றாவது ஒருநாள்
எப்படியாவது நாம்
சந்திப்போம்...
பேசத் தோன்றாமல்..
விக்கித்து நின்று
விழிகளால் நலம் விசாரிப்போம்..
இந்த நேசப் பிரிவில்
நான் நிச்சயம் நெகிழ்ந்திருப்பேன்....
உன் நினைவுகளை
சேகரிக்கும் கவனத்தில்..
இன்றிலிருந்தே
உறக்கத்தைதொலைத்து..
உணர்வுகளுக்கு அடிமைகளாகி
உரிமையாய்
உன்உள்ளத்தில்
இடம்தேடிக் காத்திருப்பேன்.
நட்பாய்..
இன்றிலிருந்தே...

2 Comments:
//என்றாவது ஒருநாள்
எப்படியாவது நாம்
சந்திப்போம்...
பேசத் தோன்றாமல்..
விக்கித்து நின்று//
மனதை ஏதோ செய்வது போல தோணலை..
enaku migappitdithaa varigal avai....
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home