கவிதை பேசுகிறது

என்னுடைய வரிகளும்.. நான் ரசித்த வரிகளும்...

Thursday, March 30, 2006

மாறாத நிகழ்வுகள்..

சுட்டெரிக்கும் வெயில்..
சுடச்சுட தார் ரோடு..
ரோட்டோர புளிய மரம்.
நிழல்கூட தரையில் படாத மதிய நேரம்
நெரிசலாய் வாகனங்கள்.

பாதையோர கடைகள்
எங்கும் மக்கள் கூட்டம்
அவரவர் செயல்களில் தீவிரமாய்....
தூரத்தில் ஒரு சிறுமி
கிழிந்த உடை.. அழுக்கு முடி..
கோணிப்பை செருப்பு.
பல நாள் பசியால் கண்கள்
அவளே குழந்தையாய்
அவள் கையில் ஒரு குழந்தை..

தூரத்தில் சிக்னலில் சிவப்பு விளக்கு.
ஷ்விட்ச் போட்ட பல்பாய்..
குழந்தை அழ ஆறம்பித்தது..

ஒவ்வொரு காரின் கண்ணாடிக்
கதவையும் தட்டும் அப்பிஞ்சுக்குக்
குழந்தையின் கைகள்...
அவளின் ஒருவேளை பசியாற்றதுடிக்கும்
அவள் செயல்கள்

காசு கொடுக்கும் கனவாண்களுக்கு
ஒரு புன்னகை பரிசாய்..
பசித்த அவள் விழிகளில் வெளிப்படுகிறது.

காசு தராத கணவான்களுக்கு
அவளின் வாய் வார்தைகள்
அர்ச்சனை வாசிக்கிறது.

தினமும் நான் கடந்து செல்லும்பாதையில்
தொடர்கதையாய்எதிர்படும்
கதாப்பத்திரங்கள்தான்..

மாறுபடாத கதைகளம்.
மாறாத கதையம்சம்.

மாற்றங்கள் மட்டுமே
நிரந்தரமான உலகில்..
மாறாத நிகழ்வுகள்..

I definetly have to mention onething here. After so many months, an update from my side. I wrote this when I was in one of my Training...:))

2 Comments:

Blogger Suka said...

அருமை..

//
மாற்றங்கள் மட்டுமே
நிரந்தரமான உலகில்..
மாறாத நிகழ்வுகள்..
//

இந்த வரிகளின் நிதர்சனத்தில், இதை படித்து முடிக்கும் போது ஒரு பெருமூச்சு வருவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.

வெகு இயல்பான கவிதை. அந்த சிறுமியின் வாழ்க்கையைப்போல.

வாழ்த்துக்கள்,
சுகா

Fri Jun 09, 11:19:00 AM 2006  
Blogger Kavi---tha said...

-nandRi Suka.

Tue Jun 13, 11:50:00 PM 2006  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home